தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடையா!

நாடு முழுக்க பட்டாசு விற்பனைக்கு தடை விதிப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தேசிய அளவில் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. அதேநேரம் ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

மேலும், குறைந்த அளவில் மாசு ஏற்படும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்றும், லைசென்ஸ் வைத்துள்ளோர் மட்டுமே பட்டாசுகளை விற்பனை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. காற்றில் மாசு அதிகரித்து வருவதால், தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை தடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் பல்வேறு பொது நல வழக்குகள் தொடரப்பட்டன. இவற்றின் மீது இன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.