ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் ஸ்டெம்செல் சிகிச்சை மூலம் 90% மரபணு நோய்களை குணப்படுத்தலாம்

இரத்தம் மற்றும் மரபணு கோளாறுகள் உள்ள நோயாளிகளுக்கு நம்பிக்கை தரும் சிகிச்சையான எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை முறையை பற்றி ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் குழந்தைகள் இரத்த நோய் மற்றும் புற்றுநோய் மருத்துவர் அஜீதா செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கினார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, மரபணு சம்மந்தபட்ட 90% நோய்களை ஆரோக்கியமான ஒருவரின் இரத்தத்திலிருந்து எடுக்கப்படும் ஸ்டெம்செல்லை அளிப்பதன் மூலம் குணப்படுத்த முடியும். உடலுறுப்பு மாற்று சிகிச்சையில் தான் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறும். இந்த ஸ்டெம் செல் அளிக்கும் போது இரத்தம் ஏற்றுவதை போலத்தான் சிகிச்சை நடைபெறும்.

ஜி.கே.என்.எம். மருத்துவமனையில் 2020 ஆம் ஆண்டிலிருந்து எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போதுவரை 25க்கும் மேற்பட்டவர்களை குணப்படுத்தியுள்ளோம். சமீபத்தில் மரபணு கோளாறு ஏற்பட்ட இரண்டு குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள்.

ஆரோக்கியமாக உள்ள அனைவரும் ஸ்டெம் செல் தானம் செய்யலாம். இது வாழும்போதே எந்தவித பக்க விளைவுகளும் இன்றி செய்யக்கூடிய தானம் என்று கூறினார்.