இந்திய உறுப்பு தான நாள் கே.எம்.சி.எச் முதன்மை மருத்துவர் சொற்பொழிவு

கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் கோவை மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் சார்பில் இந்திய உறுப்பு தான நாள் முன்னிட்டு வெள்ளிக்கிழமையன்று கே எம் சி ஹாஸ்பிடல்லின் முதன்மை மருத்துவர் விஸ்வகுமார் பிரபாகரன்  உடல்  உறுப்பு தானத்தின் முக்கியத்துவத்தை பற்றி சொற்பொழிவு ஆற்றினார்.

 

உயிர் வேதியியல் துறையின் புலன் முதன்மையர் அனிதா சுபாஷ் வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் உடல்  உறுப்பு தான உறுதிமொழி அனைவரும் மேற்கொண்டனர். அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தின் என்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பாளர் டி.ராதா, என் எஸ் எஸ் திட்ட அலுவலர்களும் மற்றும் 250 தேசிய நாட்டு நலப்பணித்திட்ட  மாணவியர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.