இந்துஸ்தான் கல்லூரியில் கராத்தே சாம்பியன்ஷிப்

இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரியின், உடற்கல்வித் துறை மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட பாரம்பரிய கராத்தே சங்கம் இணைந்து கல்லூரி வளாகத்தில் தமிழ்நாடு மாநில விளையாட்டு கராத்தே சாம்பியன்ஷிப் 2023 போட்டி கல்லூரி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு நடிகரும், கராத்தே விளையாட்டு வீரருமான சுமன் கலந்து கொண்டு போட்டியினை துவக்கி வைத்தார். அசோசியேஷனின் தலைவர் சாய்புரூஸ் கலந்து கொண்டார்.

இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது.

மேலும் துவக்க விழாவில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ் பிரபு, முதல்வர் பொன்னுசாமி, உடற்கல்வி இயக்குனர் கருணாநிதி மற்றும் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரம் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.