இந்துஸ்தான் கல்லூரியில் மேலாண்மை மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியின் கேட்டரிங் துறை சார்பில் மேலாண்மை மேம்பாட்டுத் திட்ட நிகழ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில் இந்துஸ்தான் கல்லூரி முதல்வர் பொன்னுசாமி, துறைத் தலைவர் பிரேம் கண்ணா, உதவி பேராசிரியர் செஃப் செபாஸ்டின், மாணவர்கள் மற்றும் தமிழ்நாடு கேட்டர்ஸ் ஆசோசியேஷன் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இதில் சமையல் பயிற்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, ஃபார்ஈஸ்ட் என்று அழைக்கப்படும் தாய்லாந்து, மலேசியா போன்ற நாடுகளின் உணவுகளை இந்தியா உணவுகளோடு இணைத்து (Fusion) புதிய உணவுகளை தயாரித்துள்ளனர்.

இந்நிகழ்விற்கு ஏறக்குறைய 75 கேட்டரிங் உரிமையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இத்தகைய புதிய சமையல் கலைகளை தமிழ்நாடு கேட்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்களுக்கு தெரிவிக்கும் வகையில் இந்நிகழ்வு நடைபெற்றது. மேலும் கேட்டரிங் துறை மாணவர்கள் 10 வகையான சைவ, அசைவ உணவுகளை அவர்களுக்கு நேரடியாக செய்து காட்டினர்.