ஜிடோ சார்பில் குமாரசாமி குளத்தில் மரக்கன்று நடும் விழா

சர்வதேச ஜெயின் வர்த்தக நிறுவனம் (JITO ) சார்பில் குமாரசாமி குளத்தில் மரக்கன்றுகள்
நடப்பட்டது. வியாழக்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வை கோவை மாநகர துணை ஆணையாளர் கே.சிவக்குமார் துவக்கி வைத்தார்.

ஜிடோ 26 நாடுகளில் 68 கிளைகளைக் கொண்டுள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாடு முழுவதும் அமிர்தகால மஹோத்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஜிடோ சார்பில், இந்த விழா கோவையில் ஜூலை 1 முதல் தொடங்கி ஆகஸ்ட் 27 வரை எட்டு வாரங்களுக்கு கொண்டாடப்படுகிறது. இதில் மரக்கன்றுகள் நடும் விழா முக்கியத்துவம் பெறுகிறது.

குமாரசாமி குளத்தில் 30 வகையான பூக்கள் தரும் 250 மரங்களையும் மற்றுமொரு இடத்தில் பலவகை பறவைகளை கவரும் பழமரங்களையும் நட ஜிடோ திட்டமிட்டுள்ளது.

கோயம்புத்துார் ஜிடோ தலைவர் ராகேஷ், ஜிடோ அபெக்ஸ் இயக்குனர் நிர்மல்ஜெயின் மற்றும் ஜிடோ உறுப்பினர்கள் துவக்க விழாவில் பங்கேற்றனர்.