வி.எல்.பி. கல்லூரியில் பயிற்சிப் பட்டறை

கோவைப்புதூர், வி.எல்.பி. ஜானகியம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உணவு  மற்றும் விடுதி மேலாண்மைத் துறை சார்பாக தம்ஸ் அப் – காக்டெய்ல் & மாக்டெய்ல் என்னும் தலைப்பில்  ஒரு நாள் திறன் மேம்பாட்டுப் பயிற்சிப் பட்டறை நிகழ்வு நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக அல்ஹம்ரா கோல்ஃப் கிளப் உதவி பான மேலாளர், சிவ பிரசாத் கலந்துக் கொண்டார். இவர் அமர்வில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் காக்டெயில் மற்றும் மாக்டெய்ல்களை உருவாக்குவது பற்றிய தகவல்களை வழங்கினார்.

மேலும் பிளடி மேரிஸ், காஸ்மோ பாலிட்டன்ஸ், மோஜிடோஸ், மார்டினிஸ், ராப் ராய்ஸ் போன்ற நவீன மற்றும் உன்னதமான காக்டெயில்களை அறிமுகம் செய்து, பாட்டில் வித்தை நுட்பங்களை வழங்கினார்.