கல்லீரல் புற்றுநோய்க்கு முழுமையான சிகிச்சை தரும் கே.எம்.சி.ஹெச்.

கல்லீரல் புற்றுநோய்?

கல்லீரல் புற்றுநோயை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, கல்லீரலில் உருவாவது; மற்றொன்று, மற்ற உறுப்புகளில் உருவான புற்றுநோய் கட்டி கல்லீரலுக்கு பரவுவது.

கல்லீரல் புற்றுநோய் எதனால் உருவாகிறது?

நமது நாட்டில் கல்லீரல் புற்றுநோய்க்கான முதல் காரணமாக சொல்லப்படுவது, ஹெபடைடிஸ் பி மற்றும் சி என்ற ஒரு வகையான நோய்த்தொற்று கிருமிகளாகும். பின்னர், சிரோசிஸ் (cirrhosis) என்று சொல்லப்படுகின்ற கல்லீரல் சுருக்கம், அடுத்த முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சிரோசிஸ், மோசமான குடிப்பழக்கம் மற்றும் கட்டுப்பாடற்ற உணவுப்பழக்கம் அதனையொட்டி உருவாகின்ற சர்க்கரை நோய் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் போன்றவற்றால் ஏற்படுகின்றது.

கல்லீரல் புற்றுநோய் வராமல் எப்படி தவிர்ப்பது?

ஹெபடைடிஸ் பி அண்ட் சி கிருமிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அவற்றை குணப்படுத்துதல், சிரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருத்தல் போன்ற வழிமுறைகளால் நோய் வராமல் தடுக்கவும், பாதிக்கப்பட்டால் ஆரம்ப நிலையிலேயே குணப்படுத்தவும் முடியும்.

இந்த நோய் கண்டறிந்த பிறகு எந்தெந்த வழிகளில் இவற்றை குணப்படுத்தலாம்?

இந்தக் கட்டியினை நவீன சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியும். அவ்வாறு உறுதி செய்தபின், உடலின் மற்ற பாகங்களுக்கு பரவி உள்ளதா இல்லையா என்பதைப் பொருத்து, மேற்கொண்டு சிகிச்சை முறைகள் அமையும். நவீன மருத்துவத்தின் வரப்பிரசாதங்களான மைக்ரோவேவ் அப்லேஷன் (Microwave Ablation) (அப்லேஷன் மூலமாக புற்றுநோய் திசுக்களை அழிப்பது), TACE (கேன்சர் கட்டியின் இரத்தக்குழாய்க்கு நேரடியாக மருந்து செலுத்துதல்), TARE (கேன்சர் கட்டியின் இரத்தக்குழாய் மூலம் நேரடியாக ரேடியோதெரபி கொடுத்தல்) போன்றவற்றைப் பயன்படுத்தி இக்கட்டியைக்  கட்டுக்குள் கொண்டு வரலாம். இதன் பக்க விளைவுகளும் மிக மிகக் குறைவு.

கேன்சர் மருத்துவத்தில், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையின் பங்கு என்ன?

முதலில் கூறியதுபோல, சிரோசிஸ் நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் கட்டி வருமாயின் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பது மிகவும் சிக்கலானது. அதே சமயத்தில் இக்கட்டியை குணப்படுத்தக்கூடிய வாய்ப்பைத் தவறவிட முடியாது. அவ்வாறான மக்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, நோயை குணப்படுத்துவது மட்டுமின்றி நிறைந்த ஆயுளை நல்ல வாழ்க்கை தரத்துடன் அமைத்துக் கொடுக்கிறது.

இவ்வகையான நவீன சிகிச்சை முறைகள்  மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பு உள்ளதா?

இந்த அனைத்து சிகிச்சை முறைகளும் நமது கோவை கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில், கேஸ்ட்ரோ, ரேடியோ மற்றும் லிவர் துறையின்கீழ் சீர்பட செயல்படுகின்றது.

இதுதொடர்பான ஆலோசனைக்கு கல்லீரல் மற்றும் கணைய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் விஸ்வகுமாரை அணுகலாம். தொடர்புக்கு: 733 9333 485