மாணர்வகளுக்கு இலக்கு என்பது மிக முக்கியம்

– ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் பேச்சு

இரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2023 – 2024 ஆம் கல்வியாண்டிற்கான மாணவ, மாணவிகள் வருகை குறித்து அனுகிரஹா என்ற நிகழ்வு மூன்று நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பி.எஸ்.ஜி. கலை கல்லூரியின் முன்னாள் ஒய்வு பெற்ற ஆங்கிலப் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ரூட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கவிதாசன், சென்னை இ கிருசாடர்ஸ் நிறுவனத்தின் முதன்மை நிர்வாக அதிகாரி சத்தியராஜ் ஆகியோர், சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

முதல் நாள் அமர்வில், ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன், ‘விரல் தொடும் தொலைவில் வெற்றி’ என்னும் தலைப்பில் மாணவர்களிடம் உரையாற்றினார். மேலும் அவர் பேசுகையில்,  மாணர்வகளுக்கு  இலக்கு என்பது மிக முக்கியம். ஓவ்வொரு மாணவனின் நேரம், காலம் தன் நடைமுறைகள் மூலம் எடுத்துரைத்தார். நட்பின் இலக்கணம் அறிந்தாலும் மாணவர்கள் கல்விக் கற்றலை முறையாக அறிந்து கொள்ள வேண்டும். சிறந்த முறையில் கற்றுக் கொண்டு நாளையச் சாதனையாளர்களாக வலம் வர வேண்டும், என்றார்.

இரண்டாம் நாள் அமர்வில், சத்தியராஜ் பேசுகையில், மாணவர்கள் இன்றைய காலகட்டத்தில் எவ்வாறு முன்னேற வேண்டும் என்றும், தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டு, அதற்கான பயிற்சிகள் பெற்று, தகுந்த வேலைவாய்ப்பினைப் பெற வேண்டும் என்று கூறினார்.

முன்றாம் நாள் அமர்வில், கவிதாசன் பேசுகையில், மாணவர்கள் கல்வி கற்றலில் ஆர்வம் இருக்கவேண்டும். கல்வியால் தான் பெரிய முன்னேற்றம் காண முடியும். சிந்தனை துளிர்கள் மாணவர்கள் மத்தியில் இருக்கவேண்டும், என்றார்.