கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் கல்லீரல் பரிசோதனை முகாம்

கோவை மெடிக்கல் சென்டர் கல்லீரல் மையம் நடத்தும் கல்லீரல் பிரச்னைகளுக்கான பரிசோதனை முகாம் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 5 வரை நடக்கிறது.

கே.எம்.சி.ஹெச். கல்லீரல் மையம் உலகத்தரம் வாய்ந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகளுடன் அனைத்து கல்லீரல் நோய்களுக்கு சிகிச்சை அளித்திடும் வகையில் அமைக்கப்பெற்றுள்ளது. இந்த மையத்தில் இதுவரை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட கல்லீரல் அறுவை சிகிச்சைகள் மற்றும் 300க்கும் மேற்பட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இம்முகாமில் நாள் பட்ட கல்லீரல் நோய், மஞ்சள் காமாலை, குடிப்பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் பாதிப்புகள், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய், கல்லீரலில் கொழுப்பு படிதல், கால்கள் மற்றும் அடிவயிற்றில் வீக்கம் போன்றவை பரிசோதனை செய்யப்படுகின்றன.

அல்ட்ரா சவுண்ட் மற்றும் பைப்ரோஸ்கேன், கல்லீரல் வேலை செய்யும் விதம் பற்றிய பரிசோதனைகள், மஞ்சள் காமாலை ஹெபாடைடிஸ் பி அன்ட் சி பரிசோதனைகள் போன்றவை சலுகை விலையில் செய்யப்படுகின்றன.

10,000 ரூபாய் மதிப்புள்ள இந்த பரிசோதனைகள், முகாமின் சிறப்பு சலுகையாக 1,999 ரூபாய்க்கு மேற்கொள்ளப்படுகிறது. காலை 8 மணி முதல் 10 மணி வரையில் முகாம் நடக்கிறது.

கல்லீரல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள், அரவிந்த், அருள்ராஜ் ராமகிருஷ்ணன், பாரி விஜயராகவன், சிபிதூரன் மற்றும் விஸ்வகுமார் ஆகியோர் முகாமில் பங்கேற்கின்றனர். மேலும் விபரங்களுக்கும், முன்பதிவிற்கும் 733 9333 485 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முக்கிய குறிப்பு : முகாமில் கலந்து கொள்வோர் காலை 8மணி முதல் காலை 10 மணிக்கு வெறும் வயிற்றில் வந்து பரிசோதனைகள் செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை ரிப்போர்ட்கள் கிடைப்பதற்கு 3 மணிநேரம் ஆகும். அதன் பின்பு மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளலாம்.