கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி – 2023

முத்தமிழ் அறிஞர் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி – 2023’  சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது என கோவை மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் அறிவிப்பு.

முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ‘கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி – 2023’  சென்னையில் வருகின்ற ஆகஸ்ட் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 5, 10, 21 மற்றும் 42 கி.மீ., பிரிவுகளில் போட்டிகள் நடக்கின்றன.

மெரினாவில் துவங்கி, அடையாறு உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று, மீண்டும் மெரினாவில் நிறைவு செய்யும் வகையில், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியனின் ஏற்பாட்டில் நடக்கும் இந்த போட்டியில், கடந்த ஆண்டு 43 ஆயிரம் பேர் பங்கேற்று அதில் வசூலான தொகை, எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

அதேபோல, இந்தாண்டும் 75 ஆயிரம் பேர் பங்கேற்று, ‘கின்னஸ்’ சாதனை ஓட்டமாகவும், பதிவு செய்ய ஏற்பாடு செய்யபடுகிறது .

இப்போட்டியில் வசூலாகும் தொகையை, ராயப்பேட்டை புற்றுநோய்  அரசு மருத்துவமனை கட்டமைப்புகளுக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

“கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி – 2023′” போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 78711 66660 என்ற அலைபேசி எண்ணிலும், https://kalaignarmarathon.com/ என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம்.

மேலும் விபரங்கள் தேவைப்படுவோர் கோவை மாவட்டக் கழக அலுவலகத்தை அணுகவும்.