எஸ்.என்.எஸ் கல்லூரியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாவட்ட காவல்துறை, எஸ்.என்.எஸ் இன்ஸ்டிடூஷன்  மற்றும் யங் இந்தியன்ஸ் இணைந்து நடத்திய உலக போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி  எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரிவளாகத்தில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்  பத்ரி நாராயணன் தலைமையில் நடைபெற்றது .

இந்நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது ,

கோவை மாவட்டத்தில் போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகளவில் இல்லையென்றாலும் , தினமும் பல போதைப் பொருட்களை மாவட்ட காவல்துறை கைப்பற்றி வருகிறது .

கோவையில்  போதைப் பொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக  ”போதையில்லா கோவை” (Drug free kovai) என்ற முன்னெடுப்பு தொடங்கப்பட்டுள்ளது.

போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளை அறியாமல், மாணவர்கள் மன அமைதிக்காக போதைப் பொருட்களை பயன்படுத்த தொடங்கி,பின்னர் ஆயிரம் மடங்கு மன உளைச்சலுக்கு உள்ளாகின்றனர்.

மாணவர்களிடையே இதை தடுக்கும் நோக்கில் கல்லூரி வளாகங்களில் 126 போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்க்கெதிரான குழுக்கள் அமைக்கப்படடுள்ளன. இக்குழுக்கள் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரின் நேரடி கவனிப்பின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன.

மேலும், இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் போதைப் பொருட்கள் பயன்பாட்டிற்கு எதிரான  உறுதி மொழியை எடுத்தனர் .

இந்தாண்டு காவலருக்கான முதலமைச்சர் பதக்கம் , போதை பொருட்கள் பயன்பாட்டைச் சிறப்பாக தடுத்ததிற்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்களுக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது .

மேலும் ,  இந்நிகழ்ச்சியில் , எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரி முதல்வர் செந்தூரபாண்டியன், கருமத்தம்பட்டி டி.எஸ்.பி தையல் நாயகி, சங்கர் ஐ.எ.எஸ் அகாடமி இயக்குனர் அருண், யுவா ஷேர்பேர்சொன் வைஷ்ணவி ஆகியோர் சிறப்பு விருந்தினராகப்  பங்கேற்றனர்.