நடிகர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்!

நடிகர் விஜய்யின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் மற்றும் ரசிகர் மன்றத்தினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர் மன்றத்தினர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் கோவை அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 10 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இதனை மாவட்ட தலைவர் சம்பத் வழங்கினார். இந்நிகழ்வில் ஏராளமான விஜய் ரசிகர்கள் மற்றும் நற்பணி மன்றத்தினர் கலந்து கொண்டனர்.

இதே போல் கோவையில் பல்வேறு இடங்களில் விஜய் ரசிகர்கள் நலத்திட்ட உதவிகளை வழங்கி நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடி வருகின்றனர்.