கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சர்வதேச இனைய வழி கருத்தரங்கம்!

கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ECE, EEE, EIE துறைகள் இணைந்து ஏற்பாடு செய்த IEEE- சர்வதேச கருத்தரங்கம் “சஸ்டைனபுள் கம்ப்யூட்டிங் அண்ட் ஸ்மார்ட் சிஸ்டம்ஸ்” ICSCSS’2023 புதன்கிழமை அன்று காலை 9:30 மணிக்கு ஆன்லைன் முறையில் தொடங்கப்பட்டது.

இக்கருத்தரங்கில், நவீன தொழில்நுட்பத்தில் பல்வேறு துறைகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை தங்களது ஆய்வு கட்டுரைகள் மூலம் கல்வியாளர்களும், தொழில் துறையினரும் பங்கேற்று கலந்துரையாடினர். பல்வேறு நாடுகளில் இருந்து பெறப்பட்ட 948 கட்டுரைகளில் சுமார் 280 கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 263 கட்டுரைகள் கருத்தரங்கிற்கு பதிவு செய்யப்பட்டன.

தலைமை விருந்தினரான IEEE R10 SRC துணைத் தலைவர், IEEE Excom உறுப்பினர் (மெட்ராஸ் பிரிவு) நிர்மல் தொடக்க உரையாற்றினார். அவர் பேசுகையில், மனிதகுலத்தின் நீண்டகால நல்வாழ்வுக்காக சமூக, பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் வளங்களை சமநிலைப்படுத்த செயற்கை நுண்ணறிவு, பிக் டேட்டா அனலிட்டிக்ஸ், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ஐ.ஓ.டி போன்ற வளர்ந்து வரும் கணினி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி நிலையான தகவல் தொழில்நுட்ப சூழலை உருவாக்க வேண்டும்.மேலும், விவசாயம், போக்குவரத்து, சுகாதாரம், ஸ்மார்ட் சிட்டி, தடயவியல், தொழில்நுட்ப பாதுகாப்பு, ஆட்டோமேஷன், போன்ற துறைகளில் ஸ்மார்ட் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி தரவு சேமிப்பு மற்றும் ஆற்றல் மேலாண்மை குறித்தும் வலியுறுத்தினார்.

தலைமை நிர்வாக அதிகாரி கே.கருணாகரன் மற்றும் கல்லூரியின் முதல்வர் ஜெயா ஆகியோர் கருத்தரங்கின் ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பை வெளியிட்டனர். இவ்விழாவில் டீன் மகுடீஸ்வரன்,  துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.