கோவை டாட்டாபாத்தில் அப்துல் கலாம் சிலையுடன் அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்கா

கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை டாடாபாத் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அறிவியல் பூங்காவில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சிலை, ராக்கெட், பூமி உருண்டை உருவங்கள் ஆகியவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

மேலும், சிறுவர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் பூங்கா செயல்பாடுகளை மாநகராட்சி ஆணையர் பிரதாப் ஆய்வு மேற்கொண்டார்.

அதைத்தொடர்ந்து, பெரிய கடைவீதி, ராஜவீதி, கிராஸ்கட் சாலை ஆகிய பகுதிகளில் ரூ.7.48 கோடி மதிப்பில் 1.75 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோட்டார் இல்லாத வாகனப் போக்குவரத்து திட்டத்தில் நடைபாதை அமைக்கும் பணி மற்றும் மின்விளக்குகள் அமைக்கும் பணியை பார்வையிட்டார்.

இந்த ஆய்வின் போது, செயற்பொறியாளர் கருப்பசாமி, உதவி செயற்பொறியாளர் புவனேஸ்வரி, உதவிப் பொறியாளர் கணேசன், சுகாதார ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடனிருந்தனர்.