தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகப் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கோவை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஜம்முவின் ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் காஷ்மீரின் ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் இடையே ஸ்ரீநகரில் 15.05.2023 திங்கட்கிழமை சாண்ட்விச், ட்வின்னிங் திட்டத்தின் கீழ் முதுகலை மாணவர்களின் ஆராய்ச்சியை எளிதாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்தானது.

முதன்மையாக இருவேறு நிறுவனங்களுக்கிடையே கல்வி மற்றும் ஆராய்ச்சி ஒத்துழைப்பை வளர்ப்பது, சாண்ட்விச், ட்வின்னிங் திட்டத்தின் மூலம் முதுகலை மாணவர்கள் பரிமாற்றத்தைத் தொடங்குவது போன்ற அம்சங்களை இரு பல்கலைக்கழகங்களும் கூட்டாக ஒப்புக் கொண்டன. இதில் பங்குபெறும் மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்பின் ஒரு பகுதியை ஒரு பல்கலைக்கழகத்திலும் மற்றொரு பகுதியை மற்றொரு  பல்கலைக்கழகத்திலும் முடிக்கவேண்டும்.

அதிகாரிகள், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பதிவாளர் இரா. தமிழ்வேந்தன், ஜம்மு ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பதிவாளர், ஷீல்குமார் குப்தா மற்றும் காஷ்மீர் ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக பதிவாளர், டி.எச். மசூதி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷைர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் நசீர் அகமது கனய் ஆகியோர் முன்னிலையில் மாணவர்களின் நலனுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

உடன் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டமேற்படிப்பு பயிலக முதன்மையர்  ந.செந்தில், வேளாண்மை முதன்மையர் ந.வெங்கடேச பழனிச்சாமி, ஒருங்கிணைப்பாளர் (ஐடிபி) எஸ்.டி சிவக்குமார் மற்றும் இருதரப்புகளின் பிரதிநிதிகளும் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.