மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

டாக்டர் மகாலிங்கம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் கற்றல் அனுபவ வடிவமைப்பு – எல்.எக்ஸ்.டி (learning experience design – LXD) என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதில் என் ஐ ஏ கல்வி நிறுவனங்களின் செயலர் ராமசாமி முன்னிலையில் சென்னை தமிழ்நாடு அப்பெக்ஸ் திறன் மேம்பாடு மையத்தின் நிர்வாக இயக்குனர் கிரிதரன் கலந்து கொண்டு எல் எக்ஸ் டி- யில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

கற்றல் அனுபவ வடிவமைப்பு துறையில் முன்னோடியாக உள்ள நெதர்லாந்தை சார்ந்த மில்ஸ் என்ற வல்லுனர் ஆன்லைன் மூலம் இந்தியாவில் எல்.எக்ஸ்.டி. தொடங்கப்பட்டதை வெகுவாக பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து ஓசூர் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் இணை பொது மேலாளர் மஞ்சுநாதா “மாறுபட்ட கற்றல் சூழலில் எல்.எக்ஸ்.டி” என்ற தலைப்பில் உரையாற்றினார்.

பின்னர், கல்லூரியின் டீன் கேல்வின், எல்.எக்ஸ்.டி என்ற தலைப்பிலும், திறம் மேம்பாட்டு பிரிவின் தலைவர் ஞானகுரு, எல்.எக்ஸ்.டி – ன் ஒன்பது விதிகள் பற்றியும் கருத்துரை ஆற்றினார்.

இப்பயிலரங்கத்தின் துவக்க நிகழ்வின்போது, கல்லூரியின் முதல்வர் கோவிந்தசாமியின் முன்பாக டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரி மற்றும் தமிழ்நாடு அப்பெக்ஸ் திறன் மேம்பாட்டு மையமும் இணைந்து திறன் மேம்பாட்டு பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.