கோவை ,சிவனந்தகாலனியில்… ! தலைக்கு மேலே கழிவுநீர் …!

நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறைகள் மாறி மாறி கைகாட்டுவதால் பாதுகாப்பற்ற நிலையில் ரயில்வே பாலம் பெரும் விபத்து ஏற்படும் முன்பு சரி செய்ய வேண்டும் .

கோவை, சிவானந்தா காலணியில் இருந்து மேட்டுபாளையம் செல்லும் சாலை வழியில் உள்ள ரயில்வே பாலம் பாதுகாப்பற்ற நிலை உள்ளது. ஆனால் நெடுஞ்சாலைத்துறையும், ரயில்வே துறையும் மாறி மாறி கைகாட்டி நழுவுகிறார்கள். பெரும் விபத்து ஏற்படும் முன்பு மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலையீடு செய்ய வேண்டும் .

கோவை – மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து, சிவானந்தா காலனி செல்லும் சாலையில் இரண்டு ரயில்வே பாலங்கள் உள்ளன. இந்த பாலத்தின் கீழே கடக்கும் உயரம் அதிகமான வாகனங்களை எச்சரிக்கை செய்ய இருபுறமும் இரும்பு தடுப்பு பொருத்தப்பட்டு இருந்தது. தற்போது ஒரு பாலத்தின் கீழே இருந்த இரும்பு தடுப்பு அகற்றப்பட்டு சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டுள்ளது. இதனால், உயரத்தை கணக்கிடாமல் வரும் கனரக வாகனங்கள் பல நேரங்களில், பாலத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன.

மேலும், இரண்டு ரயில்வே பாலங்களிலும் ரயில்கள் செல்லும் பொழுது பெட்டிகளில் இருந்து கழிவுகள் கீழே கொட்டாமல் இருக்க இரும்பு தகடு பொருத்தப்பட்டு இருக்கும். தற்போது, அவை இல்லாததால் கழிவுகள் கொட்டி வருகிறது. இது தொடர்பாக பொதுமக்கள் என்னிடம் புகார் தெரிவித்தனர். எனவே, உயரத்தை கணக்கிடும் தடுப்பு அமைத்திட வேண்டும். பாலத்தின் கீழே ரயில் பெட்டி கழிவுகள் கொட்டாதவாறு இரும்பு தகடுகள் பொருத்தப்பட வேண்டும்.