சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளில் சிறந்து விளங்கிய அமிர்தா வித்யாலயம் மாணவர்கள்

திருப்பூர் அமிர்தா வித்யாலயம் மாணவர்கள் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளில் சிறந்து விளங்குகின்றனர். 2023ம் ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு சிபிஎஸ்இ வாரியத் தேர்வில் 92 மற்றும் 54 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் 10ம் வகுப்பு மாணவர்களில் சிவகுமாரன் 96.8 சதவீதம் பெற்று முதலிடத்திலும், ஸ்ரீமுகி 96.4சதவீதமும், ப்ரனேஷ் 96 சதவீதம் பெற்று இரண்டாமிடத்தில் உள்ளனர். அதேபோல் 12ம் வகுப்பு மாணவர்களில் முகுந்த் 95.8 சதவீதத்தில் முதலிடத்திலும் தருணமணி, பிரக்யா ஆகியோர் 90.8 சதவீதத்தில் இரண்டாமிடத்தில் உள்ளனர். மேலும், சிவகுமாரன் கணிதத்திலும், தருணமணி தகவல் பயிற்சியிலும் சென்டம் பெற்றுள்ளனர். மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினார்கள்.