ராமகிருஷ்ணா மருத்துவமனையில் கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாம்

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து கட்டணமில்லா சிறப்பு மருத்துவ முகாமினை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் திங்கட்கிழமை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், ராமகிருஷ்ணா மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் லட்ஷமிநாராயணஸ்வாமி, பொதுசுகாதாரக் குழுத்தலைவர் மாரிச்செல்வன், மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரன், உதவி ஆணையர் மகேஷ்கனகராஜ், மண்டல சுகாதார அலுவலர் குணசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் உள்ளனர்