சொகுசு கார் பரிசு விழுத்துள்ளதாக கூறி ரூ.12 லட்சம் நூதன மோசடி

கோவையை சேர்ந்த அப்துல் சமது (வயது 62) தனியார் பிளாஸ்டிக் நிறுவனத்தில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் ஆன்லைன் மூலமாக ஒரு பொருள் வாங்கினார். சிறிது நாட்களுக்கு பின்னர் அந்த நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அப்துல் சமதை ஒருவர் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த நபர் நீங்கள் வாங்கிய பொருட்களுக்காக உங்களுக்கு சொகுசு கார் பரிசு விழுந்துள்ளது எனக் கூறினார். மேலும் அந்த சொகுசு கார் உங்களுக்கு கிடைக்க வேண்டும் என்றால் கார் பதிவு கட்டணம், இன்சூரன்ஸ் ஆகியவற்றிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்றனர்.

இதனை உண்மையென நம்பிய அப்துல் சமது பல்வேறு கட்டங்களாக ரூ.12 லட்சம் பணத்தை அவர்கள் வங்கி கணக்கு மூலமாக செலுத்தினார். ஆனால் பணத்தை கொடுத்து நீண்ட நாட்களாகியும் சொகுசு கார் வழங்கப்படவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அப்துல் சமது இது குறித்து கோவை மாநகர சைபர் போலீசில் புகார் செய்தார் புகார் பேரில் போலீசை வழக்கு நடத்தி வருகின்றனர்.