இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் சிவில் சர்வீசஸ் கான்க்ளேவ்

இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மற்றும் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியுடன் இணைந்து ‘சிவில் சர்வீசஸ் கான்க்ளேவ் – 2023’ கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு கூடுதல் மாவட்ட ஆட்சியர் அலர்மேல்மங்கை சிறப்பு விருந்தினராகவும், காவல்துறை துணை ஆணையர் ஜி.சந்தீஷ் தலைமை விருந்தினராகவும் கலந்துகொண்டு மாணவர்களிடம் சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், இந்துஸ்தான்  பொறியியல்  மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெ.ஜெயா, இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி முதல்வர் நடராஜன், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.