கே.பி.ஆர் கல்லூரியில் மகளிர் தின விழா

கே.பி.ஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மகளிர் மேம்பாட்டு மன்றம் சார்பாக உலக மகளிர் தின விழா நடைபெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் முதல்வர் கீதா, நிர்வாக அதிகாரி பாலுசாமி தலைமை தாங்கினர்.

சிறப்பு விருந்தினர்களாக (Bangalore, Chief Cloud Evangelist, Intuitive Cloud) புவனேஷ்வரி சுப்ரமணியம் மற்றும் தளிர் நிறுவனர் ஹரிதா கலந்து கொண்டனர்.

அவர்கள் பேசுகையில்: பெண்கள் தன்னை வளர்த்திக் கொள்ளவும், தன் சமூகத்தை வளர்த்திக் கொள்ளவும் செய்ய வேண்டியவைகளையும், அறிந்து கொள்ள வேண்டியவையும் குறித்து விளக்கினர்.

சமூகத்தில் பெண்கள் அங்கீகாரம் வகிக்க வேண்டுமெனில் தன்னைக் குறித்த சுய மதிப்பீடுகளை அதிகரித்துக் கொள்ளுதல் நலம். தனியொருவரின் வளர்ச்சியே சமூகத்தின் முழுவளர்ச்சி ஆகையால் பெண்கள் தனக்கு ஏற்படும் இன்னல்களை இனிய வலிமையாக ஏற்றுக் கொண்டு பயணித்தல் சிறப்பு.

முழுமையான பெண் சமூக வளர்ச்சிக்கு முதன்மையானது மனிதனை மனிதன் மதித்து நல்ல புரிதலுடன் அணுகுதலே சிறந்தது. மேலும், சமூக ஊடகங்களில் விளம்பரக் காட்சிப்படங்களில் பெண்கள் குறித்தான காட்சிகள் சரியான விளக்கவுரைக்கானதாக இருப்பவைகளையே நாம் அங்கீகரித்தல் அவசியம் எனக் கூறினர்.