இந்துஸ்தான் கல்லூரியில் மேக் விருது வழங்கும் விழா

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கிராபிக் டிசைன் துறை சார்பாக இரண்டு நாட்கள் கல்லூரி வளாகத்தில் மேக் விருது விழா நடைபெற்றது. இவ்விருது வழங்கும் விழாவின் முதல் நாள் கருத்தரங்கு நடைபெற்ற்றது. இதில் குறும்படம், புகைப்படம், சுருள் படம், ஒப்பணை, கட்டிடக்கலை சின்னம், நேரடியாக பென்சிலில் வரைதல், நடனம் ஆகிய போட்டிகள் நடைபெற்றது.

இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகை, பதக்கங்கள் வழங்கப்பட்டது. இதில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து மாணவ, மாணவிகள் 1200 பேர் கலந்து கொண்டனர்.

இவ்விருது வழங்கும் விழாவில் நீயா நானா கோபிநாத் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மேலும் கோவையின் மேக் தலைமை நிர்வாக அதிகாரி சம்ஜித் தனராஜ், இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, முதல்வர் பொன்னுசாமி, கிராபிக் டிசைன் துறையின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் துணை பேராசிரியருமான பிரபு மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.