கிரிஷ் அறக்கட்டளை சார்பில் பொதுதேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி

கோவை பீளமேடு காமராஜர் சாலையில் உள்ள தியாகி என்.ஜி. ராமசாமி நினைவு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதும் 420 மாணவர்களுக்கு, கிரிஷ் சேரிடபுள் டிரஸ்ட் சார்பில் அதன் நிர்வாக அறங்காவலர் சந்தோசி ரூ.17000 மதிப்பிலான மை பேனாக்களை வழங்கினார்.

கல்வி பயிலும் மாணவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் பெண்களின் சமூகப் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நோக்கத்துடன் இந்தாண்டு ஜனவரி மாதம் கிரிஷ் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

கணவனை இழந்த பெண்கள், பழங்குடியினப் பெண்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு தேவையான உதவிகள், குழந்தைகளுக்கு கல்வி உதவி, ஏழைகளுக்கு மருத்துவ உதவி, கிராமங்கள் மற்றும் பழங்குடியினர் பகுதிகளில் மருத்துவ முகாம் நடத்துவதை நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் கோவில் பாளையத்தை சேர்ந்த ஹரிணி சேகர் என்ற மாணவிக்கு, உத்தரகாண்டில் நடைபெற்ற தேசிய அளவிலான கராத்தே தேர்வில் பங்கேற்பதற்காக இந்த அறக்கட்டளையின் சார்பில் ரூ.15000 வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு, மாநில அளவிலான கராத்தேவில் அவர் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பெர்க்ஸ் பள்ளி வளாகத்தில் மகளிர் தின விழாவின் சார்பில் நடைபெற்ற ஷீரோஸ் வாலிபால் போட்டிக்காக கிரிஷ் அறக்கட்டளை ரூ.10,000 நிதியுதவி வழங்கியுள்ளது. மேலும், இதன் நிர்வாக அறங்காவலர் சந்தோஷி, ரோட்டரி அமைப்புடன் இணைந்தும் பல திட்டங்களை முன்னெடுத்து நடத்தி வருகின்றனர்.