கோவையில் 3 வது கிளையை துவங்கிய அங்கண்ணன் பிரியாணி ஹவுஸ்

மிகவும் பழமை வாய்ந்த புகழ்பெற்ற அங்கண்ணன் பிரியாணி ஹவுஸ் தனது மூன்றாவது கிளையை கோவை சக்தி ரோட்டில் கணபதி பகுதியில் இன்று துவக்கியது.

இந்த கிளையை சிறப்பு அழைப்பாளரான பிரபல தொழிலதிபர் லீமா ரோஸ் மார்ட்டின் மற்றும் அங்கண்ணன் பிரியாணி ஹவுஸ் இயக்குனர்கள் கௌரவ், பிரவீன் ரத்தினம், சந்திப், ஜெயஸ்ரீ ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இந்த திறப்பு விழாவில் ரோட்டரி கிளப்பின் மாவட்ட ஆளுநர் சுந்தர வடிவேலு, உள்ளிட்ட முக்கிய விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.