கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி பேராசிரியருக்கு விருது

ராமகிருஷ்ணா மிஷன் விவேகானந்தா கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், விளையாட்டு செயல்திறனை மேம்படுத்துவதற்கான ஒரு பல்துறை அணுகுமுறை என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இதில் கே.எம்.சி.ஹெச் பிசியோதெரபி கல்லூரி பேராசிரியர் பிரம்மதா “நரம்பியல் செயலிழப்பு உள்ளவர்களிடையே செயல்திறனுக்கு தொழில்நுட்பமாக செயல்பாட்டு மின் தூண்டுதல் எவ்வாறு பங்களிக்கிறது” என்ற தலைப்பில் கட்டுரை சமர்ப்பித்தார். இவருக்கு சிறந்த கட்டுரை சமர்ப்பிப்பு விருது வழங்கப்பட்டுள்ளது.