இந்துஸ்தான் கல்லூரியில் சமூகப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்த பயிற்சித் திட்டம்

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், சமூகப் பாதுகாப்புப் பிரச்சனைகள் குறித்த மூன்று நாள் மாநில அளவிலான பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் சமூகப் பணிக்கான முதுகலை மற்றும் ஆராய்ச்சித் துறையின் முன்னாள் தலைவர் முரளிதரன் கலந்துகொண்டார்.

அவர் பேசியதாவது: சமூகத் தீமை என்பது சட்டத்திற்கு முரணானவை அல்லது சட்டத்திற்கு எதிரானவை. இலக்கு வைக்கப்படும் நபர்கள் இத்தகைய சமூக தீமைகளுக்கு பாதிக்கப்படக்கூடியவர்களாக மாறுகிறார்கள்.

குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் நடத்தையில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். அவர்களின் நடத்தையில் மட்டும் திருத்தம் செய்யாமல், சமூகப் பணி கல்வியாளர்களால் மேற்கொள்ளப்படும் மறுவாழ்வும் அளிக்கப்பட வேண்டும்.

சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகப் பணி கல்வியாளர்களுக்கு அதிகப் பங்கு உண்டு. சமூகப் பாதுகாப்பில் தனிமனிதனைத் திருத்துவதும், சமூகத்தைப் பாதுகாப்பதும் முக்கியம் என்று கூறினார்.