உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு நாள் முழுவதும் நடந்த திருக்குறள் கருத்தரங்கு!

உலகத் தாய் மொழி தினத்தை முன்னிட்டு கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி காலை 9.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, 12 மணி நேரம் தொடர் இணையவழி பன்னாட்டு இலக்கியக் கருத்தரங்கம் நடைபெற்றது.

திருக்குறளில் வாழ்வியல் என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கிற்கு துபாயில் இருந்து தேசியக் கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் முகமது முகைதீன் முன்னிலை வகித்தார். உலகின் ஆறு கண்டங்களில், 32 நாடுகளில் இருந்து 64 சொற்பொழிவாளர்கள் தொடர்ந்து பேசினர்.

சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் துவக்கவுரை ஆற்றினார். அவரைத் தொடர்ந்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார், மேற்கு வங்க அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளர்  பாலச்சந்திரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

முதல் நிகழ்விற்கு சிங்கப்பூர் Startup தமிழ் நிறுவனர் ஷர்மிளா நாகராஜன், திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகம் காப்பாட்சியர், சிவசத்யவள்ளி ஆகியோர் அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழியல் துறை தலைவர் சத்தியமூர்த்தி திருக்குறள் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து 32 நாடுகளில் இருந்து 64 பேச்சாளர்கள் திருக்குறளில் வாழ்வியல் பற்றி நான்கு அமர்வுகளில் கருத்துறை வழங்கினர். மேனாள் மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதி முகமது ஜியாவுதீன் தலைமையில் நிறைவு விழா நடைபெற்றது.

உகாண்டா தமிழ்ச்சங்க பொதுச்செயலாளர் முகம்மது ரபி, திரைப்பட இயக்குனர் கஸ்தூரி ராஜா, தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பஞ்சநதம், கேரள அரசின் உள்ளாட்சித் துறை முதன்மை இயக்குனர் ராஜமாணிக்கம் ஐ.ஏ.எஸ், ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

இதனைத் தொடர்ந்து அசிஸ்ட் வேர்ல்ட் ரெகார்ட்ஸ்   மற்றும் இந்தியா பிரைட் புக் ஆப்  ரெகார்ட்ஸ் அமைப்பின் நிறுவனர் ராஜேந்திரன் உலக சாதனை சான்றிதழை வழங்கினார்.