என்.ஜி.பி கல்லூரியில் ‘ஹெனோசிஸ்’ நிகழ்வு

டாக்டர்.என்.ஜி.பி.தொழில்நுட்ப கல்லூரி சார்பில் மாணவர்களின் தொழில்நுட்ப திறமையை ஊக்கப்படுத்தும் வகையில் ‘ஹெனோசிஸ் 2K23’ என்ற நிகழ்வு நடத்தப்பட்டது. கல்லூரியின் செயலர் தவமணி தேவி பழனிசாமி மற்றும் கல்லூரி முதல்வர் பிரபா விழாவைத் தொடங்கி வைத்தனர்.

அனைத்து துறைகளின் சார்பில் தொழில்நுட்ப நிகழ்வுகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சியில் பல்வேறு பொறியியல் கல்லூரிகளை சேர்ந்த சுமார் 1200 மாணவர்கள் கலந்து கொண்டனர்.