‘செல்ஃபி வித் CM’: முதல்வருக்கு வாழ்த்து தெரிவிக்க திமுக ஐ.டி.,விங் சிறப்பு ஏற்பாடு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் மார்ச் 1 ஆம் தேதி தனது 70 வது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். முதல்வரின் பிறந்தநாளை கொண்டாட திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு இரண்டு புதுமையான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன் வழியாக கட்சி தொண்டர்கள், தமிழ்நாடு மற்றும் இந்தியா முழுவதும் உள்ள முதலமைச்சர் ஸ்டாலினின் நலம் விரும்பிகள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்.

முதலமைச்சருக்கு தொலைபேசி மூலம் வாழ்த்து சொல்ல சிறப்பு எண் தி.மு.க. தகவல் தொழில்நுட்ப பிரிவினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 07127191333 என்ற எண்ணிற்கு அழைப்பு விடுக்கலாம். பின்னர், தங்களது பிறந்தநாள் வாழ்த்தை பதிவு செய்யலாம். இந்த எண் இன்று முதல் மார்ச் 2 வரை மட்டுமே செயல்படும்.

அடுத்தபடியாக முதலமைச்சர் ஸ்டாலின் உடன், செல்ஃபி எடுத்துக்கொள்ளும் விதமாக புதிய ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டுள்ளது. www.selfiewithCM.com என்ற இணையதளத்திற்கு உள்ளே சென்று க்யூ ஆர் கோடை ஸ்கேன் செய்தால் அதில் மெய்நிகர்தொழில்நுட்பம் மூலமாக முதலமைச்சருடன் செல்ஃபி எடுத்து கொள்ளலாம்.