கோவையில் இரவு நேர மாரத்தான் 3000 க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்பு

ஜெம் அறக்கட்டளையின் சார்பில் கோவையில் முதல்முறையாக மகளிருக்கான இரவு நேர மாரத்தான் போட்டி வ.உ.சி மைதானத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் 3000 ககும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டநோயாளிகளுக்கு இலவச சிகிச்சை அளிக்க நிதி திரட்டும் முயற்சியாக இந்த போட்டி நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன, ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு ஆகியோர் மாரத்தான் ஓட்டத்தை கொடியசைத்து துவக்கிவைத்தனர்.

மகளிருக்கான மாரத்தான் போட்டி மாலை 7 மணிக்கு வ.உ.சி மைதானத்தில் தொடங்கி அதே இடத்தில் முடிவடைந்தது. 3 கி.மீ, 5 கி,மீ, 10 கி.மீ மற்றும் 21 கி.மீ என நான்கு பிரிவுகளாக ஓட்டம் நடைபெற்றது.