இதயம் காக்கும் வாழைப்பழம்

பொட்டாசியம் நம் உடலில் நரம்புகள் மற்றும் தசைகளில் உள்ள செல்களுக்கு தேவையான மினரல் கனிம எலெக்ட்ரோலைட் ஆகும். பொட்டாசியம் குறைபாடு உயர் ரத்த அழுத்தம், உயர் மன அழுத்தம் உட்பட தீவிரமான உடல் கோளாறு ஏற்பட காரணமாகிறது.

பொட்டாசியம் சத்து நிறைந்த உணவுகளான வாழைப்பழம் போன்றவற்றின் செயல்திறன், ரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இருதய நோய்கள், பக்கவாதம் வராமல் தடுப்பதிலும் சிறப்பாக துணைநிற்பது அறிவியல் ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன. மேலும் சில ஆய்வுகளில், பொட்டாசியம் நிறைந்த உணவு ரத்த ஓட்டத்தில் சோடியம் அளவை கட்டுப்படுத்துதல் மூலமாக ரத்த அழுத்தத்தை குறைக்கலாம் என காட்டுகின்றன.

பொட்டாசியம் சத்தைப் பெறுவதற்கு வாழைப்பழம் ஓர் மிகச்சிறந்த இயற்கையான மூலம். ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழம் தினசரி உட்கொள்ள தேவையான பொட்டாசியத்தில் 12 சதவிகித அளவைக் கொண்டுள்ளது. வாழைப்பழம் தரும் நன்மைகள் குறித்து சத்குரு இந்த கட்டுரையில் விளக்குகிறார்.

மாதவிலக்கு பிரச்சனையில் உதவும் வாழைப்பழம்

வாழைப்பழத்தில் மெலடோனின் என்ற சத்து உள்ளது. இது தூக்கத்தை முறைப்படுத்த உதவுவதோடு, உடலின் இயற்கையான சுழற்சியை ஒழுங்குபடுத்தும். அதுபோலவே இதிலுள்ள இரும்பு சத்து மாதவிலக்கு நோய் அறிகுறி சார்ந்த பிரச்சனையை எதிர்க்க உதவும். பொட்டாசியம் குறைபாடு தசைப்பிடிப்பு ஏற்படுத்தலாம். கொஞ்சம் வாழைப்பழங்களை உண்பதால் உடலுக்குத் தேவையான பொட்டாசியம் அளவை திறன்பட சமன்செய்ய முடியும். பொட்டாசியம் உடலில் நீர் தங்கியிருக்கும் தன்மையை தடுக்கிறது, இது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளது. வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் ஙி6 சிவப்பு ரத்த அணுக்களை தயாரிக்கிறது, இது மாதவிடாய் காலங்களில் உடலுக்கு மிகவும் நல்லது.

நுண்ணுயிர் கலந்த உணவிற்கு ஓர் சிறந்த மூலம் நம் உடலில் 40 ட்ரில்லியன் நுண்ணுயிர்கள் இருக்கின்றன, பெரும்பாலானவை நம் குடலில்தான் வாழ்கின்றன. மொத்தமாக அவை குடல் நுண்ணுயிர்க்கட்டு என்று அறியப்படுகிறது. இவை நமது ஆரோக்கியத்தை தீர்மானிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் ஏற்கனவே பார்த்தது போல, வாழைப்பழங்கள் நுண்ணுயிர் கலந்த அற்புதமான உணவு. இவை குடல் நுண்ணுயிர் செழித்து வளர சரியான சூழ்நிலையை உருவாக்கித் தருகின்றன. அதிக அளவிலான ரெசிஸ்டண்ட் மாவுச்சத்து, குறிப்பாக பச்சை வாழை வகையில் உள்ளது. சிறு குடல் அதை உறிஞ்சுவதில்லை, மாறாக அப்படியே பெருங்குடலுக்கு சென்றுவிடுகிறது. அங்கு நுண்ணுயிர்கட்டுக்கு அவை உணவாகவும், எரிபொருளாகவும் இருந்து அவை வளருவதற்கு உதவுகின்றன.

உடற்பயிற்சிக்கான சரியான உணவு

ஒரு சராசரி அளவிலான வாழைப்பழத்தில் 12மி.கி. கோலைன் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வைட்டமின் பி வகையைச் சேர்ந்த கோலைன், உடலில் கொழுப்பை சேமித்து வைக்கும் மரபணு மூலக்கூறுகளில் தாக்கத்தை உண்டாக்கும் தன்மைக் கொண்டது. நீண்ட தூரம் ஓடுபவர்கள் மற்றும் இதர உயர் சகிப்புத்தன்மை கொண்ட விளையாட்டு வீரர்களுக்கு வாழைப்பழம் மிகவும் பிடிக்கும். ஏனெனில், அதில் நல்ல மாவுச்சத்து உள்ளது. மேலும் அதிக அளவில் குளுக்கோஸ் உள்ளது. இது எளிதாக ஜீரணமாகக்கூடிய சர்க்கரை, உடலுக்கு தேவையான சக்தியை நேரடியாக கொடுக்கும். நம் உடலில் செல்கள் கொழுப்பை கிரகித்துகொள்வதைக் குறைக்கக்கூடிய பெக்டின் என்ற சத்தின் நேரடி மூலமாக வாழைப்பழங்கள் உள்ளன என்று அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. கனிந்த பழங்கள் இதற்கு சிறந்தவை. ஏனென்றால், இதில் அதிக அளவில் வேகமாக ஜீரணிக்கும் இயற்கையான சர்க்கரை உள்ளது.

வலுவான எலும்புகளுக்கு வாழைப்பழங்கள்

ஒரு நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில், தினசரியளவில் நம் உடலுக்கு தேவையான கால்சியம் சத்தில் ஒரு சதவிகிதம்தான் உள்ளது. ஆனால், அது நம் உடலில் கால்சியம் சத்தை நன்றாக கிரகித்துக்கொள்ள உதவும்.

ஒரு முக்கியமான அறிவியல் ஆய்வின்படி, வாழைப்பழங்களில் உள்ள சில குறிப்பிட்ட நுண்ணுயிர்கள் குடலில் வாழ்ந்து உடலில் கிரகித்துக்கொள்ள வேண்டிய கால்சியம் சத்தின் அளவை மேம்படுத்துகிறது. வாழைப்பழத்தில் உள்ள அதிக பொட்டாசியம் சத்து நம் எலும்புகளுக்கு நல்லது. அதிக பொட்டாசியம் சத்துள்ள உணவை உட்கொள்ளும் மக்களுக்கு ஒட்டுமொத்த எலும்பு அடர்த்தி அதிகம் இருக்கும், இது வலுவான எலும்புகளுக்கு வழிவகுத்து ஆஸ்டியோபொரோஸிஸ் போன்ற எலும்பு பாதிப்பினை குறைக்கிறது என்பது ஆய்வுகளின் முடிவில் தெரியவருகிறது.

வாழைப்பழங்கள் எளிதாக கிடைக்கும்

வாழைப்பழங்கள் கிட்டத்தட்ட உலகின் அனைத்து சந்தைகளிலும் மலிவான விலையில் கிடைக்கும். வாழைப்பழத்தின் கனத்தத் தோல், பூச்சிக்கொல்லி மருந்துகள் மற்றும் வேறு சில பாதிப்பு தரும் ரசாயனங்கள், மென்மையான மற்றும் சுவையான உள் சதைப்பற்றை மாசுபடாமல் காக்கிறது.

சுலபமாக கிடைக்கும் தன்மையும், பல்வேறு பலன் தரும் பழமாக இருப்பதும் இணைந்து இதை ஓர் மிகச்சிறந்த சிற்றுண்டியாக்குகிறது. பயணத்தின்போது வெறும் இரண்டு அல்லது மூன்று நடுத்தர அளவிலான வாழைப்பழங்கள் எளிதான மற்றும் நிறைவான உணவாக இருக்கும். பழக்கூழில் சேர்க்க ஓர் அற்புதமானது. வாழைப்பழங்கள் பேக்கிங் உணவுகள் செய்வதிலும் பயனுள்ளதாக இருக்கிறது. பேக்கிங் உணவுகளில் இவை முட்டைக்கு மாற்றாக இருந்து, அதில் இனிப்பு சுவைக்காக சேர்க்கப்படும் சர்க்கரை அளவை குறைக்கவும் உதவுகிறது. சாக்லேட் பீனட் போன்ற பேக்கிங் செய்யாமல் தயாராகும் உணவு பதார்த்தங்களிலும் இவை சேர்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.