கே.ஐ.டி கல்லூரியில் மாணவர் சங்கம் துவக்கம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி), செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் துறை சார்பில் காக்னிட்ரோனிக்ஸ் (COGNITRONIX’23) என்ற மாணவர் சங்கம் துவங்கப்பட்டது.

இதனை, அறிவாற்றல் தொழில்நுட்ப ஆய்வாளர் சபரேஸ்வரன் தலைமை விருந்தினராக கலந்துகொண்டு துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அவர், “செயற்கைநுண்ணறிவு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார். நிகழ்நேர எடுத்துக்காட்டுகளுடன் செயற்கை நுண்ணறிவு பற்றிய அறிவைப்பெற மாணவர்களுக்கு விளக்கினார்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் மற்றும் மாணவர்களின் தொழில்வளர்ச்சி குறித்து கலந்துரையாடினார். மாணவர்களின் தொழில்நுட்ப மற்றும் நிர்வாகத் திறன்களை வளர்த்துக்கொள்ள ஊக்குவித்தார்.

மாணவர்கள் தங்கள் இலக்குகளை நிர்ணயிக்கவும், அதற்கேற்ப கடினமாக உழைக்கவும் அறிவுறுத்தினார். மேலும், மாணவர்கள் தொழில்நுட்ப வளர்ச்சியை நாளுக்கு நாள் மேம்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கே.ஐ.டி.கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியின் துணைத்தலைவர் இந்து முருகேசன், தலைமை நிர்வாக அதிகாரி மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் தீபா, அனைத்து துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.