எஸ்.என்.எஸ் கல்லூரி மாணவர் கராத்தே போட்டியில் சாதனை

எஸ்.என்.எஸ் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த மூன்றாம் ஆண்டு இ.சி.இ பயிலும் மாணவர் நாகேந்திரன், சென்னையில் பிப்ரவரி 4 ஆம் தேதி நடைபெற்ற 39 வது மாநில கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று தங்க பதக்கமும், 2 வெள்ளி பதக்கமும் வெனறுள்ளார்.

இதில் 25 மாவட்டங்களில் இருந்து சுமார் 1000 பேர் பங்கேற்றனர். 21 வயதுக்குட்பட்ட பிரிவு மற்றும் சீனியர் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார்.

21 வயதுக்குட்பட்டோர் கட்டா போட்டியில் வெள்ளிப் பதக்கமும், சீனியர் பிரிவில் டீம் கட்டா போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். மேலும் 21 வயதுக்குட்பட்ட ஆண்கள் குமித்தே 84 கிலோ பிரிவில் தங்கப் பதக்கமும் வென்றுள்ளார்.

இவர், உத்தரகண்ட் டெர்ஹோடனில் நடைபெற உள்ள தேசிய அளவிலான போட்டியில் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பங்கேற்க உள்ளார்.