பி.எஸ்.ஜி கலை கல்லூரியில் தமிழ்க் கனவு நிகழ்ச்சி

கோவை பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியில் தமிழ்க் கனவு எனும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்துகொண்டு மாணவ மாணவியர்களிடம் உரையாற்றினார். அதனை முன்னிட்டு பல்வேறு துறைகளில் சார்பில் அமைக்கப்பட்ட திட்ட விளக்க அரங்குகளை பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், மாநில திட்டக்குழு உறுப்பினர் சிவராமன், பி.எஸ்.ஜி கலை கல்லூரி முதல்வர் பிருந்தா மற்றும் பலர் கலந்துகொண்டனர்.