எஸ்கான் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் கோவையில் துவக்கம்

மஹிந்த்ரா நிறுவனத்தின் ஜெனரேட்டர் வர்த்தகத்தை தமிழகத்தில் விரிவுபடுத்தும் விதமாக எஸ்கான் நிறுவனம் தனது தலைமை அலுவலகத்தை கோவையில் துவங்கியுள்ளது.

இந்தியாவின் பிரபல நிறுவனமான மஹிந்த்ரா பவரோல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஜெனரேட்டர் உற்பத்தி துறையில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் ஜெனரேட்டர் என்ஜினின் வெளிப்புற வடிவமைப்பு மற்றும் வர்த்தக மேலாண்மைகளை எஸ்கான் நிறுவனம் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் குறிப்பாக தொழில் நகரமான கோவை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்களில் மகிந்த்ரா பவரோல் ஜெனரேட்டர் வர்த்தகத்தை விரிவுபடுத்தும் விதமாக கோவை ராம்நகர் பகுதியில் எஸ்கான் ஜென்செட்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக மஹிந்த்ரா பவரோல் நிறுவனத்தின் சீனியர் துணை தலைவர் சஞ்சய் ஜெயின் கலந்துகொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் கௌரவ அழைப்பாளர்களாக எஸ்கான் நிறுவன நிர்வாக இயக்குனர் சுர்ஜித் குப்தா, தமிழ்நாடு மேலாளர் ராமலிங்கம், கோவை கிளை அலுவலக விற்பனை மேலாளர் விஜயராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.