இந்துஸ்தான் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டியில் சாதனை

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, மெக்கட்ரானிக்ஸ் துறையை சேர்ந்த மாணவர்கள் தேசிய அளவிலான பிளிப்கார்ட் கிரிட் 4. 0 ரோபோடிக்ஸ் போட்டியில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தை பிடித்து ரூ.75000 பரிசு தொகையை பெற்று சாதனை படைத்துள்ளனர். இப்போட்டி சுமார் 3000 பதிவு செய்யப்பட்ட அணிகளுக்கு இடையே நடைபெற்றது.

இதைப்பற்றி கல்லூரி முதல்வர் ஜெயா கூறுகையில்: தனித்தன்மையுடன் செயலாற்றி இந்திய தொழில் நுட்ப கல்லூரிக்கு அடுத்த படியாக எங்கள் மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர். இதன் மூலம் பிளிப்கார்ட் கிரிட் கவுன்சில் எங்கள் மாணவர்களுக்கு நேர்காணல் செயல் முறையை முறியடிக்கும் முழு குழுவுக்கும் உதவித்தொகையுடன் இன்டெர்ன்ஷிப் வழங்குகிறது என்றார்.

இந்துஸ்தான் கல்வி குழுமங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாகச் செயலாளர் பிரியா சதீஷ்பிரபு, தலைமை நிர்வாக அதிகாரி கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா, மெக்கட்ரானிக்ஸ் துறை தலைவர் சரவணக்குமார் ஆகியோர் வழிகாட்டி தாமோதரன், பீட்டாகாப்டர் குழு மாணவர்கள் நிவி ஸ்ரீதர் வினுராஜ், அஸ்வின், ராகுல் மற்றும் மஹிகிருஷ்ணா அனைவருக்கும் தங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இவர்கள் தொடர்ந்து 2 ஆண்டுகளாக இந்தப் பரிசை பெறுகின்றனர்.