டைமண்ட்ஸ் இந்தியா சார்பில் வைரம், தங்க நகைகள் தயாரிப்பதற்கான பயிற்சி மையம்

டைமண்ட்ஸ் இந்தியா நிறுவனம் வைரம், தங்க, வெள்ளி நகைகளை தயாரிக்கும் தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுக்கும் பயிற்சி மையத்தை ஆர்.எஸ் புரத்தில் அமைத்துள்ளது. இதன் துவக்க விழா வரும் பிப்ரவரி 5 ஆம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை டைமன் மற்றும் நகைகள் வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சலானி பயிற்சி நிறுவனத்தை தொடங்கி வைக்க உள்ளார் .

வைரத் தொழிலில் ஆசிரியராக, பயிற்சியாளராக, ஆலோசகராக 35 வருட அனுபவம் கொண்ட முரளிதரன் தலைமையில் பயிற்சி நிலையம் தொடங்க உள்ளது.

பெண்களுக்காகவே பெண்களால் நடத்தப்படும் இம்மையத்தில், வருடம் தோறும் 100 தகுதியான மகளிர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக 100% ஸ்காலர்ஷிப் கொடுக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்படும்,

பயிற்சி காலம் 30 நாட்கள் முதல் 90 நாட்கள் வரை இருக்கும், பயிற்சியை முழுமையாக பூர்த்தி செய்தவர்கள் கோவை மாவட்டத்திலும் அல்லது அவர்கள் இருக்கும் ஊருக்கு அருகாமையில் தகுந்த இடத்தில் பணியில் அமர்த்த உதவிகள் செய்து தரப்படும்.