எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரியில் விளக்கேற்றும் விழா

எஸ்.என்.எஸ் செவிலியர் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விளக்கேற்றும் விழா நடைப்பெற்றது.

இவ்விழாவை எஸ்.என்.எஸ் கல்லூரியின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியன் மற்றும் தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல் குமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த விளக்கேற்றும் விழாவில் தலைமை விருந்தினராக கே.எம்.சி.ஹெச் செவிலியர் கல்லூரியின் முதல்வர் மாதவி கலந்துகொண்டார்.

எஸ்.என்.எஸ் தொழில் நுட்ப முதல்வர் செந்தூர்பாண்டியன், எஸ்.என்.எஸ் பார்மஸி கல்லூரியின் முதல்வர் சதீஷ்குமார், செவிலியர் கல்லூரியின் முதல்வர் கவிதா, துணை முதல்வர் பாரதி ஆகியோர் செவிலியர் மாணவர்களின் கையில் உள்ள விளக்கின் ஒளியை ஏற்றிவைத்தனர்.

செவிலியர்களின் சேவையை போற்றும் வகையில் மாணவர்கள் அர்ப்பணிப்பு பாடல்களை பாடினார். கைவிளக்கு ஏந்திய காரிகையின் உறுதிமொழியை துணைமுதல்வர் பாரதி கூற மாணவர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

தலைமை விருந்தினர் பேசியதாவது; செவிலியர் தொழில் மிகவும் உயர்ந்த தொழில் அனைவரும் அதை உணர்ந்து நோயாளிகளிடம் அன்போடும், பணிவோடும், அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும்.

தங்கள் துறையில் சிறந்து விளங்க ஒழுக்கம்,நேர்மை, தன்னம்பிக்கை, இரக்க குணம், திறனாய்வு சிந்தனை ஆகிய அடிப்படை பண்புகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறினார்.