முதுமையை குறைக்கும் மாம்பழம்!!

பழங்களின் ராஜா, முக்கனிகளில் ஒன்று என சிறப்புமிகுந்து கொண்டது மாம்பழம்.

இது  நாவில் நீர் ஊறவைக்கும் சுவை கொண்டது மட்டுமல்ல, உடல்  ஆரோக்கியத்திற்கு தேவையான பல அருமையான குணங்களைக் கொண்டது. மாம்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் எனப்படும் எதிர் ஆக்சிகரணிகள் நிறைய அடங்கியுள்ளன.

இவை இருதய நோய், விரைவில் முதுமை அடைவது மற்றும்  புற்று நோய் போன்றவற்றிற்கு காரணமாக இருக்கும் உயிரணுக்கள் சேதமடையாமல் பாதுகாத்து, அவற்றை சீராக வைத்துக்கொள்கிறது.

மாம்பழத்தில் இரும்பு சத்து மிக அதிகமாக அடங்கி உள்ளது. கர்ப்பிணி பெண்களுக்கு மாம்பழம் மிகவும் நல்லது. அத்துடன் ரத்த சோகை உள்ளவர்களுக்கும் இது  நல்லது.