என்.ஜி.பி கல்லூரியில் 74 வது குடியரசு தின விழா

74 வது குடியரசு தின விழா டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கொண்டாடப்பட்டது.

என்.ஜி.பி.கலை கல்லூரி, என்.ஜி.பி. தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் கல்வியியல் கல்லூரியின் மாணவர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர். தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் பிரபா வரவேற்புரை வழங்கினார்.

இதில் சிறப்பு விருந்தினராக ஸ்கேன்-ஓ-பிளான் சிஸ்டம்ஸ் இந்தியாவின் மருத்துவ இயற்பியல் மற்றும் பயன்பாட்டு நிபுணர் மிதுன் குமார் கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றிச் சிறப்புரை வழங்கினார்.

இதைத் தொடர்ந்து, என்.சி.சி மாணவர்கள் அணிவகுப்பு நடந்தது. குடியரசு தின விழாவின் சிறப்பு, அதன் முக்கியத்துவம் குறித்துச் சிறப்பு விருந்தினர் கூறினார். அதில் தேசத்தில் ஒவ்வொரு குடிமகனின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து, அரசியலமைப்பு மேம்படுத்துவதற்கான அம்சங்களையும் வலியுறுத்திக் கூறினார்.

இந்நிகழ்வில் கோயம்புத்தூர், லெப்டினன்ட் கர்னல் இம்மானுவேல் தமாங் வாழ்த்துரை வழங்கினார். தேசத்தைக் காப்பது குறித்து, மக்களின் பாதுகாப்பு குறித்து உரை ஆற்றினார். வீரர்களின் ஒப்பற்ற முயற்சிகளுக்காக அவர்கள் செய்த தியாகங்கள் மற்றும் அவர்களுக்கு கிடைத்த மரியாதைகள் குறித்து கூறினார்.