ரத்தினம் கல்லூரியில் குடியரசு தின விழா

ரத்தினம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 74 வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கார்கில் போர் வீரர் கார்த்திகேயன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

இவர் தனது உரையில் போதைப் பொருளுக்கான விழிப்புணர்வையும், போதைப் பொருளிலிருந்து வெளியே வருவதற்கான வழிமுறைகளையும், மாணவ மாணவியர்களுக்கு எடுத்துரைத்தார். மாணவ மாணவியருக்கு ராணுவ வீரர் குறித்தும், தேசப்பற்று குறித்தும் கூறினார். தேசப்பற்று என்பது ராணுவ வீரருக்கு மட்டுமல்லாது ஒவ்வொரு தனிமனிதனுக்கும், குடிமகனுக்கும் மிகவும் முக்கியமானது என்று எடுத்துரைத்தார்.

ராணுவ வீரர்கள் செய்யும் தியாகங்களையும், அவர்களின் ராணுவ வீரர்களின் பணியையும் எடுத்துரைத்ததோடு மட்டுமல்லாது தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு ராணுவத்தில் சேருவதற்கான வழிமுறைகளையும், சிறப்பான ராணுவ வீரராக பணியாற்றுவதற்கான அம்சங்களையும் கூறினார்.

மேலும் குடியரசு தின விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.

கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரியும், கல்லூரி செயலாளருமான மாணிக்கம் விழாவிற்கு தலைமையேற்றார். கல்லூரி முதல்வர் முரளிதரன் வாழ்த்துரையாற்றினார். தேசிய மாணவர் படை வீரர்கள் குடியரசு தின விழாவிற்கான அணிவகுப்பு செய்தனர். இவ்விழாவில் மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.