
இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 74 வது குடியரசுதின விழா கொண்டாடப்பட்டது.
கல்லூரியின் முதல்வர் பொன்னுசாமி தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றினார். மேலும் விளையாட்டுத்துறை, நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படையைச் சார்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில் இந்தஸ்தான் கல்வி குழுமத்தின் நிர்வாக அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், நிர்வாக செயலர் பிரியா, துறைத்தலைவர்கள், பேராசிரிய, பேராசிரியைகள் கலந்து கொண்டனர்.