இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள்

திருத்தம் செய்யப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு சென்னை தலைமை செயலகத்தில் இன்று வெளியிட்டார்.

அதன்படி, தமிழகத்தில் மொத்தம் 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில் 3.04கோடி ஆண் வாக்காளர்கள், 3.15 கோடி பெண் வாக்காளர்கள், 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர்.

சிறிய தொகுதியாக சென்னை துறைமுகம் தொகுதியில் 1.7 லட்சம் வாக்காளர்களும், அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில், 6.66 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல் குறித்த சந்தேகங்களுக்கு 1950 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.