“எப்போ வருவாரோ” நான்காம் நாள் நிகழ்ச்சி

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் நடைபெறும் “எப்போ வருவாரோ” 2023 நிகழ்ச்சியின் நான்காம் நாள் நிகழ்வு கிக்கானி பள்ளியில் புதன் கிழமையன்று நடைபெற்றது. 8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் நான்காம் நாள் அமர்வில் ஶ்ரீ சாந்தி குமார ஸ்வாமிகள், கலந்து கொண்டு சீரடி சாய்பாபா குறித்து சொற்பொழிவாற்றினார்.

உள்ளதை உள்ளவரே உணர்வதே பக்குவம்!

ஷீரடி சாய்பாபா எப்போது, எங்கு பிறந்தார் என்பது பற்றி யாருக்கும் தெரியாது. 80 வயது வரை வாழ்ந்தார். இவர் தத்தாத்திரேயரின் 5 வது அவதாரமாக போற்றப்படுகிறார். மனிதர்களுக்கு எல்லாம் முக்தியை கொடுக்க அவதரித்தார்.

16 வயது இளைஞனாக ஷீரடிக்கு சென்றார். அங்குள்ள கோவில் அர்ச்சகர் ஒருவர், இவரைப் பார்த்து சாய் என்று முதலில் அழைத்தார். சாய் என்றால் குரு என்று அர்த்தம். குரு இல்லாத சமயமே கிடையாது. அவர் அறியாமை எனும் இருளை நீக்கி, ஆன்ம ஒளிக்கு வழிகாட்டுகிறார். இறைவனே குருவாக வந்து பக்குவப்பட்ட ஆன்மாக்களுக்கு ஞானம் வழங்குகின்றார் என்று சைவ சித்தாந்தம் சொல்கிறது.

தவத்திற்கு சாதனமே பக்குவம் தான். பக்குவப்பட்ட ஆன்மாக்கள் தான் சரியை, கிரியை, யோகம் வழியாக ஞானத்தை அடைய முடியும். உள்ளதை உள்ளவரே உணர்வதே பக்குவம். சரிகமபதநி என்ற 7 ஸ்வரங்களும் தெரிந்து விட்டால் சங்கீதம் முழுவதும் தெரிந்து விட்டதாக கூற முடியாது. பக்குவமும் அதுபோன்றுதான்.

பாபா அடிக்கடி சொல்வார், என்னை முழு இதயத்தோடு சரணடைபவரிடம் நான் எப்போதும் உடன் இருப்பேன். எங்கெல்லாம் செல்கிறீர்களோ அங்கே எனது சமாதியும் சேர்ந்து செல்லும். எவனுடைய பாவங்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டு விட்டனவோ, அவன்தான் “சாய், சாய்” என்ற நாமத்தை சொல்லி என்னிடம் வருவான் என்பார்.

மயிலாப்பூரைச் சேர்ந்த நரசிம்ம சுவாமி ஜி, தமிழ்நாட்டில் சாய் மார்க்கத்தையும், ஆந்திராவில் பரத்வாஜர் பரப்பினர். மேலும், பாபாவுக்கும், கோவைக்கும் மிகப்பெரிய தொடர்பு உள்ளது.

8 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியின் நான்காம் நாள் அமர்வில் ஶ்ரீ சாந்தி குமார ஸ்வாமிகள், கலந்து கொண்டு சீரடி சாய்பாபா குறித்து சொற்பொழிவாற்றினார்.

இந்நிகழ்வில் பொது மக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.