பொருளாதார நெருக்கடி காரணமாக 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் அமேசான்

அமேசான் நிறுவனம் தற்போது நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டு 18,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

முன்னதாக அமேசான் நிறுவனம் கடந்தாண்டு நவம்பர் மாதமே 10,000 ஊழியர்களை பணியிலிருந்து நீக்கம் செய்திருந்தது.

இந்நிலையில், அமேசான் தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி ஊழியர்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தற்போது நிலவும் கடினமான பொருளாதார சூழலை எதிர்கொள்வது மிகவும் சவாலாக உள்ளது. இதனால், மேலும் 18 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளோம்.
மேலும், இந்த பணிநீக்கமானது இந்தாண்டு தொடக்கத்திலேயே நடைபெறவுள்ளது. ஐரோப்பாவில் சில பணி நீக்க நடவடிக்கைகள் இருக்கும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமேசான் வரலாற்றுலேயே இந்த பணிநீக்கம் மிகப்பெரியதாக பார்க்கப்படுகிறது.