ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ரூ.648 வழங்க சிறப்பு தீர்மானம்

கோவை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள விக்டோரியா ஹாலில் மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமையில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்களின் நலன் கருதி அவர்களுக்கு வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் கூலியை உயர்த்தி 648 ரூபாயாக வழங்கிட சிறப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

மேலும் தற்பொழுது கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ளதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுத்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாமன்ற கூட்டத்திற்கு வந்த அனைவருக்கும் கிருமிநாசினி மற்றும் முக கவசங்கள் வழங்கப்பட்டன.