வாகன உரிமையாளர்கள் கவனத்திற்கு!!! நாளை முதல் மோட்டர் இன்சூரன்ஸ் பட்ஜெட் அதிகரிப்பு

கார் மற்றும் இரண்டு சக்கர் வாகன உரிமையாளர்கள் செப்டம்பர் 1 முதல் ஒரு ஆண்டுக்கான மோட்டார் இன்சூரன்ஸினை வாங்க முடியாது. மூன்று வருடத்திற்கான பாலிசிகளை மட்டுமே வாங்க முடியும். காப்பீட்டு நிறுவனங்கள் 1 ஒருவருடத்திற்கான பாலிகளை கைவிட்டு 5 வருடம் மற்றும் 3 வருடங்களுக்கான மோட்டார் இன்சுரன்ஸ் பாலிசிகளை மட்டுமே இனி விற்க உளள்னர். கார் உரிமையாளர்களால் குறைந்து 3 வருடத்திற்கான இன்சூரன்ஸ் பாலிசிகளை மட்டுமே வாங்க முடியும். அதே நேரம் இரண்டு சர்க்கர வாகன உரிமையாளர்கள் 5 வருடத்திற்கான பாலிசிகளை வாங்க வேண்டும்.

இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ ஆகஸ்ட் 29-ம் தேதி ஒரு வருட மோட்டார் இன்சூரன்ஸ் பாலிசிகளைச் செப்டம்பர் 1 முதல் வழங்கப்பட மாட்டாது என்று இனி புதியதாக வாங்கும் வாகனங்கள் மற்றும் இன்சூரன்சினை புதுப்பிக்க விரும்பும் வாகன உரிமையாளர்கள் ஒன்றுக்கு 3 வருடங்கள் முதலான பாலிசிகளை மட்டுமே வாங்க முடியும் என்றும் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. மூன்றாம் தரப்ப்பு மோட்டார் இன்சூரன்ஸ் வாகன உரிமையாளர்கள் அனைவருக்கும் கட்டாயம் ஆகும். இந்தத் திட்டங்களின் பாலிசி பெற்று இருக்கும் போது வாகனம் விபத்துகளின் போது சேதம் அடைந்தால் அதனைச் சரி செய்வதற்கான கட்டணங்களை இதன் கீழ் பெற முடியும்.