ஸ்ரீ அரசமகள் பெண்தேவி ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் விழாவானது நடைபெற்றது.

கோவை பேரூர் செட்டிபாளையம் போஸ்ட் காலனியில் அமைந்துள்ள மிக  பழமை வாய்ந்த அரசமகள் பெண்தேவி அம்பிகையினுடய ஆலயத்தில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு மகா கும்பாபிஷேகம் விழாவானது இன்று நடைபெற்றது. இதை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு துவங்கிய நான்காம் கால யாக பூஜை,கணபதி ஹோமம், மங்கள இசை,  திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை உடன் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் கோவில் நிர்வாகிகள் மற்றும் சிவாச்சாரியர்களால் புனித நீர் ஊர்வலமாக கோவிலை சுற்றி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.இதனைத் தொடர்ந்து பல்வேறு கோவில்களிலிருந்து எடுத்து வரப்பட்ட புனித நீரை கலசங்களுக்கு ஊற்றபட்டது.பின்னர் ஸ்ரீ அரசமகள் பெண் தேவிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா அபிஷேகம், தீபாராதனையுடன் பூஜைகள் நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு அன்னதானமும் நடைபெற்றது.